-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, October 22, 2018

அகத்தியர் ஆருடம் - 2-3-3

சுய புத்தியில் மாற்றம் ஏற்படுவதால் நல்லோரிடம் அறிவுரை கேட்பது நன்று.

 பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். பாடல் 2 - 3 -3


இருக்குமே கஷ்டமாக இரண்டுடன் யிருமூன்றானால்
உருக்குமே உள்ளந்தன்னை உலகிலே கெடுபேராகும்
பெருக்கமாய் இருந்தசெல்வம் பலவிதவிறையமாகும்
நொறுக்குமே நோய்தானுன்னை நிலையது நீங்கிப்போகும் 


 விளக்கம்

இரண்டுடன் இரு மூன்று விழுந்தால் அதிக கஷ்டங்களும் அதனால் மனதை வருத்தக் கூடிய கவலைகள் உண்டாகும். கெட்ட பெயரை ஏற்படுத்தும். நிறைந்திருந்த செல்வம் பல வகையில் விரயமாகும். இதனால் நோயும், கவலையும் சூழ்ந்து சுயபுத்தி மாற்றும் என்கிறார் அகத்தியர்.