-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, October 19, 2018

அகத்தியர் ஆருடம் - 2-3-2

பகைவர்கள் இல்லாத தருணம் இது. வருமானம் வரவேண்டிய நேரம் இது. சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். 


பாடல் 2 - 3 -2

உன்மனம் போலேயாகும் மிரண்டு மூன்றிரண்டே வீழ்ந்தால்
பண்டைய பொருளும் சேரும் பகைவர்கள் குலமே நாசம்
பெண்டுடன் புத்திரபேரும் பெருகுவாய் வேணலாபம்
கொண்டாடும் உனது தெய்வம் கூடவே துணையிருக்கு. 


 விளக்கம்

இரண்டுடன் மூன்றும் இரண்டும் விழுமானால் எதிரிகள் இல்லாத வாழ்க்கையும், பூர்வீக பொருளனைத்தும் வந்து சேரும். இரண்டு தாரங்களுண்டாகும், புத்ர லாபம் பெருகும், பகைவர்களின் குலமே நாசமாகும். உன் வீட்டில் மடிந்த குலதெய்வங்கள் உனக்குப் பக்கத்துணையாக இருக்கும் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி