-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, April 14, 2018

விளம்பி வருடம்

இன்று பிறக்கும் புதிய வருடம் அனைவருக்கும் அனைத்து வளங்களையும் நலங்களையும் முழுமையாக தரும் வருடமாக அமைய இயற்கையை போற்றுவோம். 

இயற்கையை பாதுகாப்பதே இந்த இனிய புத்தாண்டில் நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் முதல் மற்றும் முக்கிய குறிக்கோளாக இருக்கட்டும்.

நிறைய மரங்களை நடுவோம். அல்லது அதைச் செய்பவர்களுக்கு நம்மால் முடிந்தளவு உதவுவோம்.  வீட்டில் தோட்டம் போட இயலாவிட்டாலும் ஏதேனும் ஒரு சிறு செடியையாவது வளர்ப்போம். தரமான காய்கறிகளை அதிக பேரம் பேசாமல் வாங்கிக் கொள்வோம்.  தண்ணீரை தேவையான அளவு மட்டுமே பயன் படுத்துவோம்.  தினந்தோரும் ஏதேனும் ஒரு தாவரத்திடம் அது தரும் நன்மைக்கு நன்றி சொல்லுவோம்.

இயற்கையை பாதுகாப்பதே இந்த இனிய புத்தாண்டில் நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் முதல் மற்றும் முக்கிய குறிக்கோளாக இருக்கட்டும்.

நன்றி.No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி