-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, August 26, 2015

போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

வெற்றி பெற வேண்டுமானால் போட்டியில் பங்கெடுக்க வேண்டும். முயற்சியும் எதிரிகளும் மட்டுமே வெற்றியைத் தேடித் தர முடியும். தீவிரமாக முயற்சி செய்ய வேண்டிய நிலை எதனால் ஏற்படுகிறது?. நினைத்ததை எளிதில் அடையமுடியாததனால் தான். எளிதில் அடைய முடியாமல் இருப்பதற்கு  தடைகற்களாக இருப்பதெல்லாம் எதிரிகள் தான்.  எதிரிகள் மனிதனாகவோ விலங்குகளாகவோ தான் இருக்க வேண்டியதிலலை.  எதனை வெற்றி கொள்கிறோமோ அது தான் எதிரி. கோபத்தை வெல்வதும் வெற்றி தான். தேர்வில் மற்ற மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெறுவதும் வெற்றி தான். கோபம் மனம் சார்ந்தது. மதிப்பெண் மனிதன் சார்ந்தது. ஆனால் முயற்சியும் வெற்றியும் ஒன்று தான்.

தொழில் அல்லது வேலையில் வெற்றிபெற ஜோதிடம் கூறும் சூட்சுமங்கள்

3ம் பாவம் முயற்சி 6ம் பாவம் எதிரிகள். இந்த இரண்டு பாவங்களை வைத்து போராடும் குணம் மற்றும் வெற்றிபெறும் நிலை ஆகியவற்றை கணிக்க முடியும்.   போட்டியில் பங்கெடுக்கும் அனைவரும் முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வெற்றி பெறுவது ஒருவராகத்தான் இருக்க முடியும். மற்றவர்களுக்கு இது தோல்வியல்ல.  முயற்சி. முயற்சி என்பது 3ம் பாவத்தை வைத்து கணிக்கப்படுகிறது.

முயற்சி இருவகைப்படும். ஒன்று முயற்சி மற்றொன்று விடா முயற்சி.  எடுத்த காரியத்தில் வெற்றிபெறும் வரை வெறிகொண்டு முயற்சி செய்து கொண்டே இருப்பது தான் விடா முயற்சி. 3ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுப கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ முயற்சி இருக்கும் ஆனால் அது விடா முயற்சியாக இருக்காது. ஏதோ ஒரு காரணத்தால் விட்டுக்கொடுக்கக்கூடிய நிலை உருவாகிவிடும்.3ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் விடா முயற்சி இருக்கும். முயற்சி நன்மை தருமா என்பதை 3ம் பாவத்தின் பாக்கிய பாவமான 11ம் பாவத்தை வைத்து பார்க்க வேண்டும்.

6ம் பாவத்தில் சுபகிரகங்கள் இருந்தால் எதிரியை மன்னிக்கும் குணம் இருக்கும். அல்லது அடங்கிப் போகும் நிலை இருக்கும். 6ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் எதிரியை எதிர்தது போரிடும் குணம் அமையும். 3ம் பாவமும் ஆறாம் பாவமும் சுபகிரகங்கள் இருப்பது மிகவும் சாந்தமான குணத்தைத் தரும். இரண்டிலும் அசுபகிரகங்கள் இருப்பது பிடிவாத குணத்தைத் தரும்.


நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி