-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, August 11, 2015

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். 2-2-2

செயல்களின் விளைவுகள் மாறியமையலாம். பொருமைகாக்க வேண்டும். என்றோ செய்த தவறுக்கு இன்று தண்டனை கிடைக்கலாம். எடுத்த முயற்சியை மீண்டும் மீண்டும் சீர்துாக்கிப் பார்த்து எதையும் செய்ய வேண்டும்.


பாடல் - 2-2-2

அன்று நீ பாவம் அலைச்சலும் திரிச்சலாகும்
நன்றில்லை மூரெண்டானால் நயம் பேசி மோசம் செய்வார்
வென்றிடும் வழக்கானாலும் வகையற்று தோற்றுபோகும்
ஒன்றுமே பயன்படாது உருபடா முறையிதமே


விளக்கம்.
மூன்று முறையம் இரண்டு விழுமானால் முன் காலத்தில் நீ செய்த வினையினால் இப்பிறவியில் வெகு கவலைகள் உண்டு என்கிறார்.  மேலும் எக்காரியத்திலும் நன்மை ஏற்படாது. வெல்லக் கூடிய வழக்குகள் கூட கலகத்தால் தோல்வியாகும்.  நீ செய்யும் காரியம் எதுவும் உருப்படாது.  சில நாள் போக வேண்டும் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி