-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, July 14, 2015

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

தி,மு. மற்றும் தி.பி. அதாவது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என்ற இரு வாழ்க்கை முறைதான் மிகவும் சிறந்தது. திருமணத்திற்குப் பின் நிச்சயம் ஒரு மாற்றம் என்ற ஒன்று வரவேண்டும். திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே மாறாமல் திருமணத்திற்குப் பின்னும் இருக்கிறேன் என்று கூறும்படி வாழ்வது சிறப்பானது அல்ல. காரணம், நம்முடைய தகுதிகள் உயரும் போது நம்முடைய எண்ணங்களில் செயல்களில் முன்னேற்றம் ஏற்பட்டு மாற்றங்களை உருவாக்க வேண்டும். திருமணம் ஒரு சடங்கு அல்ல. வாழ்வியல் முறை. உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தக்கூடிய வாழ்வியல் நடைமுறைதான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வைபவம் விரைவில் நடந்தால் மிக நல்லது. அது அனைவருக்கும் அமைவதில்லை. உண்ண உணவும் உடுக்க உடையும் எப்படி அவசியமோ அப்படித்தான் திருமணமும். நிச்சயம் காலம் கடப்பதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும்.

திருமணம் தாமதவாவது ஒன்றும் பெரிய பாவச் செயல் அல்ல. நல்ல வரன் அமைவது தான் முக்கியம். குரு எனப்படும் வியாழன் கிரகம் மிகுந்த சுப கிரகம். குரு பார்க்க கோடி நன்மை ஆனால் களத்திர பாவம் எனப்படும் 7ம் பாவத்தை தனித்த குரு பார்த்தால் திருமணம் தாமதமாகிறது. பல சமயங்களில் 7ம் பாவாதிபதியைப் பார்த்தாலும் திருமணம் தாமதமாகத் நடக்கிறது. ஆனால் நிச்சயம் திருணம வாழ்க்கை உண்டு. அதில் மாற்றம் இல்லை. மிக விரைவாக திருமணம் நடைபெற என்ன பரிகாரம்.திருமணம் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும்


குரு - புத்திர காரகர். பெற்றோர் பிள்ளைக்கு நல்ல வரனைத் தேடிக் கொடுக்கக் கூடிய பொறுப்பில் உள்ளனர். அதனால் ஓரு பிள்ளை உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீடுகளில் வரன் தேடலாம். பிள்ளைகள் அதிகம் உள்ளவர்கள் ஒரு பிள்ளைமட்டுமே உள்ள வீடுகளில் வரன்களைத் தேடுவதால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

குரு ஓரை நடப்பில் உள்ள நேரங்களில் திருமணம் தொடர்பான செயல்களை மேற்கொண்டால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

ஜாதகத்தில்  ஜென்ம குருவிற்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கோச்சார குரு வரும் காலங்களிலும், குரு அந்தரம் சூட்சும அந்தர காலங்களிலும் திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அந்த காலங்களில் விரைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

 தொடரும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி