-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, June 10, 2015

திருமணம் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும்

திருமணத்திறகு வரன் பார்க்கும் படலம் பெரிய தொடர்கதையாக இருப்பதாக பெரும்பாலோர் கூறுகின்றனர். இதற்கு காரணம் ஜோதிடம் அல்ல என்பதை பலமுறை வேதஜோதிடம் எடுத்துக்கூறியிருக்கிறது. திருமணம் விரைவில நடைபெற நாம் எடுக்கும் முயற்சிகளை சற்று முறைப்படுத்தினால் வெற்றி எளிதில் கிடைக்கும். ஆனால் திருமண வாழ்வின் பலன் அவரவர் செய்த வினைப்பயன் படிதான் நடக்கும்.
திருமணம் விரைவில் நடைபெறத் தடையாக இருப்பது எது
திருமணம் விரைவில் நடைபெற பலவிதப் பரிகாரங்கள் செய்தும் பலனில்லையே என்று நொந்து கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு. திருமணம் உரித்த காலத்தில் நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விட எந்தக் காலத்த்தில் அதைச் செய்ய வேண்டும் என்பது தான் விடை. வரன் பார்க்கச் செல்லும் காலம், பெண்ணும் ஆணும் முதலில் சந்திக்கும் காலம், ஜாதகத்தைப் பொருத்தம் பார்க்கும் நேரம் மேலும் ஜாதகரின் உடன் செல்பவர்கள் இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். எப்பொழுதும் வரன் பார்க்கச் செல்லும் போது அஸ்வினி புணர்புசம், புசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம் திருவோணம், அவிட்டம் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாட்களில் வரன் பார்க்கச் செல்வது உத்தமம். மேலும் துவிதியை திருதியை பஞ்சமி சப்தமி, தசமி துவாதிசி திரியோதிசி ஆகிய திதிகளாக இருந்தால் உத்தமம். செவ்வாய் சனி தவிர்த்த நாட்களில் செல்வது உத்தமம். ஜாதகரின் தாராபலம் மிக்க நாட்கள் சிறப்பான பலன் தரும். சுக்கிர ஓரையும் புதன் ஓரையும் நல்லது. இப்படி இயற்கை சாதகமாக உள்ள நாட்களில் திருமணத்திற்கான செயல்களைச் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.நன்றி. 

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி