-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, April 19, 2015

agathiyar-arudam-tamil-1-6-3

பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஆறும் மூன்றாம் முறை மூன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 பாடல் 1-6-3

ஆகுமே கவசம்பாரு அப்பனே ஒன்றார் மூன்றும்
சோகமே பெரிதாய் நிற்கும் சலிப்பினால் இடத்தை மாற்றும்
ஏகமாய் பொருளும் போகும் இடறான நோயுண்டாகும்
போகுமே தொழிலும் நஷ்டம் பொல்லாப்பு மடைகுவாய்.

விளக்கம்

உனக்கு ஒன்றும், ஆறும் , மூன்றும் வந்ததால் குடும்பத்தில் கலகம் நேரும்.எதிலும் துயரமே மேலிடும். சலிப்பின் காரணமாய் இடமாறுதலும் பெரும் பொருள் சேதமும், கடுமையான நோயும் உண்டாகும். தொழில் முடக்கமாகும், சினேகித பொல்லாப்பு மடைவாய் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி