-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, February 20, 2015

வறுமையை வெல்ல ஜோதிட சூட்சுமங்கள்.

வாழ்க்கையில் வறுமையைக் குறிக்கும் கிரக சூழ்நிலைகள்.

வறுமை என்பது இல்லாதது, இயலாதது. இந்த இரண்டின் நிலையைத்தான் வறுமை என்கிறோம். உண்பதற்கு சரியான ருசியான உணவில்லை என்பதும், சரியான ருசியான உணவிருந்தும் சாப்பிட முடியாது என்பதற்கும் விளைவு ஒன்று தான். சாப்பாடு கிடையாது என்பது தான.

வறுமை என்பது பணம் இல்லாதது மட்டுமல்ல. பணத்தையும் தாண்டி, நியாயமாக கிடைக்க வேண்டிய எதுவெல்லாம் கிடைக்க வில்லையோ அதில்எல்லாம் நாம் வறுமையாக இருக்கிறோம் என்று பொருள். அதிகப்படியான நோய், நியாமான வருமானமின்மை, அடுத்தவர்களையே எப்பொழுதும் நம்பியிருத்தல் இப்படி எல்லாமே வறுமையின் அடையாளங்கள் தான்

இருந்தும் அனுபவிக்க முடியாதவனுக்கும் இல்லாமல் அனுபவிக்காமல் இருப்பவனுக்கும் ஜாதகத்தில் என்ன வித்தியாசம் இரு்க்கும்? புண்ணிய ஸ்தானமும் பாக்கியஸ்தானமும் நன்றாக இருந்தால் அவனால் அனுபவிக்க முடியும். இந்த இரண்டு பாவங்களும் கெட்டுப் போயிருந்து மற்ற பாவங்களின் மூலம் அவன் செல்வந்தராயிருந்தாலும் அவனால் அதனை அனுபவிக்க முடியாது.

இயலாதவர் மற்றும் இல்லாதவருடைய கிரக சூழ்நிலைகள் எப்படி இருக்கும். ?இராசிச் சக்கரத்தின் இலக்கிணாதிபதி, நவாம்சத்தில் இருக்கும் இடத்தின் அதிபதி இராசியில் இலக்கிணத்திற்கு 2, 7, 6, 8, 12 ம் இடங்களில் இருந்தால் வருமை ஏற்படும் என்று ஜோதிடம் கூறுகிறது..

இரண்டாம் இடத்தில் இருந்தால்

இரண்டாம் பாவ பலன்களான தனம் வாக்கு குடும்பம் இவற்றை இழந்தோ அல்லது மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாத சூழல் உருவாகும்.

7ம் இடம், மனைவி, நண்பர்கள், இவர்களால் தொடர்ச்சியாக தொல்லைகள் ஏற்படும்.

6ம் இடம் இடைவிடாத நோயினாலும், வழக்கு, சண்டைகளாலும் அதிகப்படியான கடனாலும் நிம்மதியை இழக்க நேரிடும்.

எட்டாம் இடம், தொடர் விபத்து, ஆசைகள் இருந்தும் உடலோ மனமோ உடன் படாமல் வாழ்க்கையில் வெறுமையை உணர்தல்.

பன்னிரெண்டாம் இடம், எதை எடுத்தாலும் தோல்வி, நிம்மதியான உறக்கமின்மையால் அவதி போன்றவை ஏற்படும.

இதற்குத் தீர்வு என்ன?

வறுமை என்பது நிரந்தரமல்ல. யோகமான திசா புத்தி காலங்களில் கிடைக்கும் நல்ல சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்வது தான் வறுமையை ஒழிக்க ஒரே தீர்வு. அனைவருக்கும் யோக சூழ்நிலைகள் நிச்சயம் அமையும் அப்பொழுது பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் கிடைக்கும் அல்லது பிரச்சனைகள் வரும் முன் காக்கக்கூடிய வழிமுறைகள் உருவாகும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி