-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, February 25, 2015

புதையல் கிடைக்கும் யோகம்.

புதையல் கிடைக்கும் யோகம்.

இலக்கணத்திற்கு இரண்டாம் பாவத்தில் இரண்டுக்குடைய கிரகமும் நான்காம் பாவத்திற்குரிய கிரகமும் சந்திரனும் செவ்வாயும் (நால்வரும்) சுபகிரக பார்வையுடன் சட்பல அஷ்டவர்க்க பலத்துடனும் கூடியிருந்தால் ஜாதகருக்கு புதையல் யோகம் ஏற்படும். இரண்டு பதினொன்று ஒன்பது ஆகிய பாவங்களின் அதிபதிகள் வலிமையுடன் சுபஸ்தானங்களில் அமர அதுவும் புதையல் கிடைக்கும் யோகம் தான்.

புதையல் கிடைக்கும் யோகம் என்றால் என்ன?.  நிலத்தைத் தோண்டும் போது தான் புதையல் கிடைக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் பார்க்கும் வேலையில் செய்யும் தொழிலில் கிடைக்கும் எதிர்பாராத  வருமானம் தான் புதையல். பங்கு வர்த்தகத்தில் ஏற்படக்கூடியெ எதிர்பாராத வருமானமாகவும் இருக்கலாம். திரும்பியேவராத பணம் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த பணம் திடீரென உங்களுக்கு கிடைக்கலாம். இப்படியெல்லாம் நடந்தால் புதையல் கிடைக்கும் யோகம் உள்ளதென்று அறியலாம். உங்களுடைய முயற்சிக்கு மேலாக உங்களுடைய உழைப்பிற்கு மேலாக கிடைக்கும் வருமானம் வருவதைத் தான் புதையல் கிடைக்கும் யோகம் என்கிறோம்.

புதையல் கிடைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும். மேற்கூறிய கிரக சூழ்நிலைகள் இருந்தால் உங்களுக்கு புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அவ்வப்பொழுது வரும். இல்லையென்றால் நீங்கள் தான் புதையலைத் தேடிப் போக வேண்டும். எங்கே தேடுவது எப்பொழுது தேடுவது என்றெல்லாம் கேள்விகள் எழக்கூடும். இரண்டு மற்றும் நான்காம் பாவங்கள் குறிப்பிடும் திசையில் சந்திரனும் செவ்வாயும் திசாபுத்தி அந்தர காலங்களாக வரும் காலங்களில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளினால் எதிர்பாராத  வருமானங்கள் அதாவது புதையல் கிடைக்கும்.

புதையலைத் தேடிப்போக விருப்பமில்லாதவர்கள் (முடியாதவர்கள்) என்ன செய்யலாம். நீங்களே புதையலை உருவாக்கலாம். சிறுகச் சிறுக சேமித்து பெரும் புதையலை உருவாக்க முடியும். சிறுகச் சிறுக சேமிப்பதை பொருளாகவோ பணமாகவோ நல்ல நண்பர்களாகவோ தியாகமாகவோ சேமிக்கலாம்.  செவ்வாய்கிழமை சந்திர ஓரையில் நம்மால் முடிந்ததை சேமிக்கலாம். அப்படி சேமிப்பது நமக்கு தேவைப்படும் நேரத்தில் புதையலாக நிச்சயம் கிடைக்கும்.

மேலும் ...

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி