-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, February 15, 2015

பாரதி யோகம் - ஜோதிடத்தில் யோகங்கள்

பாரதி யோகம் - ஜோதிடத்தில் யோகங்கள் 

இயற்கையின் முன் அனைவரும் சமமே. வாய்ப்புகளும் வசதிகளும் அனைவருக்கும் பொதுவாகவே வழங்கப்படுகிறது. அதை அனுபவிக்கும் முறையில் தான் வித்தியாசம். வெற்றிபெற்றவர்கள் வாழ்க்கையிலும் வெற்றியை இழந்தவர்களின் வாழ்க்கையிலும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும். கிரகங்களின் இணைப்பையையே யோகங்கள் என்று கூறுகிறோம். ஏறக்குறைய 3000க்கம் அதிகமான யோக காரணிகள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இவற்றில் அரிதாக அமையக்கூடிய யோகங்களும் உண்டு. அந்த யோகங்களில் ஒன்று தான் பாரதி யோகம். 

பாரதி யோகம்.

இராசிச் சக்கரத்தில் 2, 5, 11ம் அதிபதிகள் (ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ) நவாம்சத்தில் இருக்கும் இடத்தின் அதிபதி, இராசிச் சக்கரத்தில் உச்சம் பெற்று 9ம் அதிபதியுடன் இணைந்திருந்தால் ஏற்படும் யோகம் - பாரதி யோகம்.

யோகத்தின் பலன்கள்.
உலகப் புகழ் பெறும் அமைப்பு, அறிஞர்கள், அழகான மற்றும் கவர்ச்சியான செயல்  அல்லது உடல், எளிதில் கவரக்கூடியவர்கள், இசையில் புலமை


Inline image 1


ஐந்தாம் அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் புதன் வீட்டில் இருக்கிறார். இராசிச் சக்கரத்தில் புதன் ஒன்பதாம் அதிபதியான சனியுடன் இணைந்து கன்னியில் உச்சம் பெற்று இருக்கிறார்.
இந்த யோகம் அரிதான யோகநிலைகளில் ஒன்றாக உள்ளது.

ஒருவர் தன்னுடைய தனி்ததிறமையை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அந்தத் துறையில் வெற்றிபெற முடியும். மேலும் பாரதி யோகம் கொண்ட நிலையில் உள்ள ஜாதகர்கள் மிக விரைவில் வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பது உறுதி.இந்த யோக நிலையில் பிறந்தவர்களால் நிச்சயம் பிரபலமாக வரமுடியும். 

யோகங்கள் இருந்தும் வெற்றிபெற முடியாததற்கு காரணம், சரியான பாதையில் முயற்சி செய்யாதது தான். தெளிவான ஜோதிடர்களை கலந்துஆலோசித்து சரியான காலசூழ்நிலைகளைக் கணித்து அந்த நேரங்களில் முயற்சியை தீவிரப்படுத்தினால் நிச்சயம் வெற்றபெற முடியும்.

நன்றி.