-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, February 24, 2015

agathiyar-arudam-tamil-1-2-2

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை இரண்டும் மூன்றாம் முறையும் இரண்டு வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது


1-2-2

பாடல்

கவலையேன் ஒன்றும் ரெண்டும் இரண்டுமே விழுகுமானால்
ஷதவணையில்லாமல் சேரும் நாள் பொருளும் ஜீவன்
குவலயத் தன்னிலுந்தன் குணத்தை பாராட்டுவார்கள்
துவக்கிடும் நோயும் நீங்கும் துணைவராலே சகாயம்.


விளக்கம்

ஒன்றும், இரண்டும், இரண்டும் விழந்தால் பலவிதமான லாபமுண்டாகும். கைவிட்டுப்போன பொருளாயினும், ஜீவனாயினும் தவணையில்லாமல் எட்டு நாளைக்குள் வந்து சேரும். உன்னை மிகவும் நல்லவனென்று புகழ்வார்கள். ஆரம்பமாகும் நோயும் நீங்கும். சினேகிதர்களால் உதவியுண்டாகும். என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி