-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, February 15, 2015

agathiyar arudam tamil 1-1-3

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறையும் ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-1-3

பாடல்

தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும் வீழ்ந்தால்
ஆணாக பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோமுண்டாம்
வீணான கவலையெல்லாம் விலகிடும் கொண்டமும் நோயம்
தோணாது கஷ்டம் நீங்கும் துணையது முருகனுண்டாம்.

விளக்கம்

முதலில் ஒன்று விழுந்து, மறுபடியம் ஒன்றும் மூன்றும் விழுமானால் மனையில் ஆண் குழந்தை பிறக்கும். ஆதனால் அதிர்ஷ்டம் பெருகும். ஆபத்துக்கள் விலகும். கெண்டமும், நோயும் நீங்கும், முருகனின் கருணையால் கஷ்டம் நீங்கும் என்கிறார்