-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, December 28, 2014

சனி பகவானின் சஞ்சாரங்கள்

சனி - பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில.. என்பதைப் போல வார்த்தையின் உச்சரிப்பே பயத்தைத் தருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது உண்மையில்லை. சனிக் கோள் மிகவும் மெதுவாக சூரியனைச் சுற்றும் கிரகம். அதனால் தான் பலன்களும் பாதிப்புகளும் நீண்ட காலம் நடப்பில் உள்ளது போலத் தோன்றுகிறது. நாம் செய்த வினைகளுக்குரிய பலனை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அதற்கு மாற்று கிடையாது. Every Action must be a reaction. நம்முடைய வினைப்பயனை நமக்கு உணர்த்துவது தான் ஜோதிடம். கிரகங்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன என்பதைவிட நாம் இதற்கு முன் என்னவெல்லாம் ஆட்டிப் படைத்தோம் என்பதை எடுத்துக் கூறுகின்றன. இந்த வகையில் நாம் செய்த செயல்களுக்குரிய பலன்களை விருப்பு வெறுப்பின்றி ஒளிவு மறைவின்றி எடுத்துக்கூறும் கோள் தான் சனிக் கோள் என்கிற சனி கிரகம். இதன் ஜோதிட சஞ்சாரங்கள் கீழ்கண்டவாறு நிகழவிருக்கின்றன. இதனால் ஏற்படும் மன நல, உடல் நல, சமூக பொருளாதார மாற்றங்களை தொடர்ந்து காணலாம்.

சனியின் சஞ்சாரங்கள்.

சனிக்கிரகம் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
சனிக்கிரகம் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
சனிக்கிரகம் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
சனிக்கிரகம் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
சனிக்கிரகம் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
சனிக்கிரகம் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிக்கிரகம் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
சனிக்கிரகம் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
சனிக்கிரகம் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
சனிக்கிரகம் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை

சனிக்கிரகம் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை

தொடரும்

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி