-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, December 22, 2013

வேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்


தேவைகள் தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன. தேவைகள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. அதேபோல அனைவருக்கும் அனைத்து தேவைகளும் எளிதில் நிறைவேறிவிடுவதில்லை. அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கூட போராடிப் பெற வேண்டிய நிலையில் கர்ம வினைப் பயன்கள் அமைந்து விடுகின்றன. அவற்றை எப்படி சரிசெய்து வாழ்க்கையை திருப்தியாக வாழப்போகிறோம் என்ற கேள்விக்கு சரியான பதிலை ஜோதிடம் கூறுகிறது. ஜோதிடப் பலன்கள் என்பது எதிர்காலத்தில் நடகக இருப்பதை மட்டும் கூறுவதில்லை. நிகழ்காலத் தேவைகளை நிறைவேற்றவும் உதவுகின்றன.

வாழ்க்கையை வாழ்வதற்கு நிச்சயமாக பணம் என்ற ஒன்று தேவைப்படுகின்றது. பணத்தைச் சேர்ப்பதற்குரிய செயல்கள் தான் தொழில் அல்லது வேலை. குழந்தையாக இருக்கும் வரையில் உண்ணுவதும் உறங்குவதும் தொழிலாக இருக்கும். வளர வளர கல்வி பயில்வதும் ஒரு தொழில் தான். அதற்கு பின்பு பணத்தைத் தேடுவது தான் முழுநேர தொழிலாக இருக்கும். அப்படி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதற்கு ஒன்று சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். அல்லது அடுத்தவர்களிடத்தில் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும். எதுவும் எளிதில் கிடைக்காதபோது ஆனால் அது கண்டிப்பாக தேவைப்படும் போது அதை அடைவதற்குரிய வழியை ஜோதிடம் எடுத்துக் கூறுகிறது. வேலை அல்லது தொழில் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது. ஜோதிடத்தின் மூலம் என்னென்ன கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்பதை இனி காணலாம்.

பொதுவாக வாழ்க்கையின் பொருளாதார நிலை.
ஒருசிலர் இருப்பதை வைத்தே திருப்தி காணுவர். ஒருசிலருக்கு எவ்வளவு கிடைத்தாலும் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு திருப்தியில்லாத சூழ்நிலையிலே காலம் கடத்திவிடுவர். பெரும்பாலோருக்கு வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்கும். இப்படி பொதுவான பொருளாதார நிலையை முதலில் கணித்துக் கொள்ள வேண்டும். அதற்கு 2ம் பாவம் 5ம் பாவம் 11ம் பாவம் துணை நிற்கும்.

பொருள் வரும் சூழ்நிலை.
பணத்தை சேர்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மூதாதயர் சொத்துக்கள் கிடைக்கலாம். தன்னுடைய சொந்த விடாமுயறசியால் பணம் சேர்க்லாம். மனைவி மூலம் சொத்துக்கள் கிடைக்கப் பெறலாம். அதிர்ஷடம் கிடைக்கப்பெற்று திடீரென பணக்காரராகலாம்.  இன்னும் சிலருக்கு கடன் வாங்கித் தான் பொருள் சேர்க்கக்கூடிய நிலைவரலாம். எந்த வழியில் பணம் வரும் என்பதை ஜோதிடம் எடுத்துக் கூறுகிறது. பணபர ஸ்தானங்கள் எனப்படும் 2, 5, 8 , 11 ஆகிய பாவங்கள் இதனை எடுத்துக் காட்டும்.

பொருள் வரும் காலம்.
பிறக்கும் போதே செல்வந்தராக பிறப்பதும் உண்டு. படிக்கும் போதே பணம் சம்பாதிப்பவர்களும் உண்டு. பலமுறை அனுபவப்பட்டு பின் வெற்றிபெறுவதும் உண்டு. வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி திடீரென முன்னேற்றம் காண்பவரும் உண்டு. இப்படி எந்த காலம் உகந்தது என்று திசா புத்தி அந்தரங்கள் மூலம் அறியலாம்.

இதைத் தவிர
வேலை (உத்தியோகம் ) - 2, 6, 10 ம் பாவங்கள்
சொந்த உழைப்பு - 2, 10
கூட்டணி மூலம் வியாபாரம் - 2, 7, 10
ஏஜென்சி வியாபாரம்  - 2, 3, 9, 10
அதிர்ஷடம் (சூதாட்டம்) - 2, 10, 5
தருண முதலீடு - 2, 10, 5

இப்படி ஒவ்வொரு பாவத்தின் மூலமும் நமக்கு விதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டு அதன் மூலம் சரியான கால நேரங்களில் சரியான தொழில் அல்லது வேலையைச் செய்து செல்வ செழிப்புடன் வாழலாம்.

நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி