-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, December 20, 2013

காதல் திருமணம் - தேவைகளும் தீர்வுகளும் ஜோதிட விளக்கம்

தேவைகளைப் புரிந்திருந்தால் மட்டுமே தேடுதல்கள் மூலம் விடை கிடைக்கும். ஜோதிடத்தில் தனிமனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டு. கேள்விகள் என்ன என்பதைவிட தேவைகள் என்ன என்பதை ஜாதகர்களும் ஜோதிடர்களும் புரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் சரியான தீர்க்கமான முடிவுகளைத் தர முடியும். 

சில நாட்களுக்கு முன்பு சகோதரி ஒருவர் வேத ஜோதிடத்திடம் கேட்ட கேள்வி – ” என்னுடைய காதலை என் பெற்றோர்கள் ஏற்பார்களா? ” என்று. இது சாதரணமான கேள்வி தானே அனைத்து காதலர்களுக்கும் இயல்பாக வரக்கூடிய சந்தேகம் தானே எனத் தோன்றும். ஆனால் இதற்கு ஆம் அல்லது இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பலன் கொடுக்க முடியாது. காரணம் இது ஜாதகரின் மனநிலையும்  அவரின் பெற்றோரின் மனநிலையும் அடங்கியுள்ளது. இருவருடைய ஜாதகமும் இருந்தால் தான் யாருடைய ஆதிக்கம் அங்கு செல்லுபடியாகும் என்று புரியும்.

மேலும் இந்த கேள்வியே தேவையற்றது. திருமண வாழ்க்கையின் நிலை என்பது தான் கேள்வியின் மையக் கருத்து. பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணங்களும் உண்டு. பெற்றோரை எதிர்த்து செயல்படும் காதல் திருமணங்களும் உண்டு. பெற்றோருக்காக காதலைத் தியாகம் செய்து நடைபெறும் திருமணங்களும் உண்டு. காதலுக்காக வாழ்க்கையைத் துறக்கும் நிலைகளும் உண்டு. அடிப்படையான விஷயம், திருமண வாழ்க்கையின் விதி என்ன என்பது தான். இந்த விதி செயல்படுவதற்கான காரணிகள் தான் பெற்றோர்கள். எதிர்ப்பும் ஏற்பும் விதியின் விளையாட்டுகள் தான்.

காதலர்கள் இருவருடைய ஜாதகத்திலும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நிலையில் பெற்றோரின் சம்மதம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். அப்படியில்லையென்றாலும் விதி அவர்களை சேர்த்து வாழ வைத்துவிடும். திருமணவாழ்க்கை திருப்தி தராத நிலையில் காதலர்கள் எடுக்கும் முடிவு நிச்சயம் ஏமாற்றத்தைத் தான் தரும். எல்லா காலங்களிலும் இந்த நிலை இருக்காது. சாதகமான திசா புத்தி அந்தர காலங்களில் நிலைமை மாறும். அது வரை பொறுத்திருந்தால் நிச்சயம் பொறுமைக்கு வெற்றி கிடைக்கும்.


நன்றி.