-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, July 13, 2013

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-மூன்று

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-மூன்று

அகத்தியரின் பாய்ச்சிகையை மூன்று முறை உருட்டும் போதும் ஒன்றும் ஒன்றும் மூன்றும் விழுந்தால்

தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும் வீழ்ந்தால்
ஆணாக பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோகமுண்டாம்
வீணான கவலையெல்லாம் விலகிடும் கொண்டமும் நோயம்
தோணாது கஷ்டம் நீங்கும் துணையது முருகனுண்டாம்.

ஒன்று ஒன்று மூன்றிற்குரிய பலன்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானது. வீணான கவலைகள் மறையும் நேரம் கூடி வந்துள்ளது. இறைநம்பிக்கை பெருகும். நோய்கள் குணமடையும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார்.

குழந்தைச் செல்வங்கள் தான் கிடைக்கும் செல்வங்களிலே மிகச் சிறந்த செல்வம். காரணம் மற்ற செல்வங்கள் எல்லாம் வெளியிலிருந்து வருவது. குழந்தைச் செல்வம் மட்டுமே நாம் உருவாக்குவது. அப்படிப்பட்ட செல்வம் ஆளுமைத் தன்மையோடு பிறக்குமானால் மிகுந்த பாக்கியவான்களாவோம். இதைத் தான் புத்திர பாக்கியம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. கவலைகள் இரண்டு வகை உண்டு. நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பது மற்றொன்று கடந்த காலத்தில் நடந்தது (அ) எதிர்காலத்தில் நடக்க இருப்பது. நிகழ்காலக் கவலைகள் மட்டுமே கவலைகள். மற்றவைகள் நாமாக உருவாக்கிக் கொண்டவை. அவற்றை மனத்திலிருந்து நீக்கிவிட்டால் எல்லா நாளும் நல்ல நாளாக அமைந்து விடும். புதுத் தொழில்கள் புது செயல்கள் துவங்க உகந்த நேரம்.

மகிழ்ச்சியாக இருக்கும் தருணமிது. எல்லாம் நன்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு முருகப் பெருமானை வணங்கி வந்தால் நல்லது விரைவில் நடைபெறும்.

பொதுப் பலன் - விருத்தி

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி