-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, July 2, 2013

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-ஒன்று

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-ஒன்று

அகத்தியரின் பாய்ச்சிகையை ஆருடத்தில் மூன்று முறை உருட்டும் போதும் ஒரே எண்ணான ஒன்று விழுந்தால்

மும்முறையொன்றேவந்தால் முடிந்திடும் நினைத்த எண்ணம்
அயபுவி மீது நீயும் அரசனைப் போல வாழ்வாய்
பம்பு சூனியமும் நீங்கும் பலவித லாபமுண்டாம்
தம்பிரான் சாட்சியாக தாட்சிதானிலைபாரே

ஆருடம் பார்க்கச் செல்லும் போது நமது எண்ணங்கள் நிலையாக இருக்க வேண்டும். நாம் நினைக்கும் எண்ணங்களுக்கு தகுந்தவாறு தான் நமக்கு விடை கிடைக்கும்.

பொதுவாக 1-1-1 விழுந்தால் சாதகமான பலன்கள் நடைபெறும். பொருளாதாரம் மேம்படும். பயம் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும். நீங்கள் நினைத்து வந்த காரியம் வெற்றி பெறும் என்பது அகத்தியர் கூற்று. வேலையாட்கள் உங்களுக்கு பணிந்து நடப்பர். நல்லவிதமான அறிவுரைகள், ஆலோசனைகள் வாய்ப்புகள் வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இது வரை உங்களுக்கு எதிராக இருந்தது இனி உங்களுக்கு சாதகமாக அமையலாம். பங்குச் சந்தை இலாபம் தரலாம். நீங்கள் முதலீடு செய்ய நினைத்ததை செய்யலாம். மனம் அமைதிக்குத் திரும்பும். ஒருவிதமான திருப்தியை உணர்வீர்கள். கவலைகள் உங்களை அணுகாது என்பது அகத்தியர் வாக்கு.

ஆருடம் பார்த்து திரும்பிய பின்பு நீங்கள் செய்யும் செயல்கள் வளரக்கூடிய செயல்களாக முதலீடுகளாக இருப்பின் சிறந்தது. அதாவது, வங்கியில் பணம் சேமிப்பு செய்வது. தங்கம் வாங்குவது. புதிதாக கற்கத் துவங்குவது இது போன்ற நித்தம் வளர வேண்டிய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

பொதுப்பலன்  - வெற்றி

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி