-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, May 15, 2013

குடும்ப ஜோதிடர் அவசியமா?

குடும்ப ஜோதிடர் அவசியமா?

ஆம்.

குடும்ப டாக்டர். குடும்ப வக்கில் இருப்பது போல குடும்ப ஜோதிடர் என்பவர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருப்பது அவசியமான ஒன்றாகும்.

காரணம். நம்மைப் பற்றி தொடர்ந்து தெரிந்து வைத்துள்ளவர்கள் மட்டும் தான் நமக்கு சரியான தீர்வைத் தரமுடியும். ஒரே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று வரும் போது தான் நம் உடல் நிலையைப் பற்றி அவரால் ஒரு தீர்வுக்கு வர முடியும். அதே போலத்தான் ஜோதிடரிடமும்.

நம்முடைய ஒவ்வொரு நிலையிலும் நாம் ஒருவரையே தொடர்பு கொள்ளும் போது தான் நம் கிரக சூழ்நிலைகளின் தாக்கங்களை அவர் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். நமது ஜாதக யோகங்கள் தரும் பலன்களை நம்முடைய சூழ்நிலையிலிருந்து பார்த்தால் தான் தீர்க்கமான தீர்வைத் தர முடியும். இலாபமோ நட்டமோ எது எப்பொழுது வரும் என்பதைக் கணிக்கும் முன் நம்முடைய தொழில் நிலையை அறிந்தவர்தான் தெளிவாக விடையளிக்க முடியும்.

சுபச்செலவுகள் செய்யும் காலங்கள் வரும் போது அது திருமணமா அல்லது வீடு கட்டுவதா அல்லது கோவில் திருப்பணிக்கா என்பதனை நம்முடைய நிலையறிந்தவர்கள் தான் உறுதியாக கூற முடியும். அதற்காகத்தான் குடும்ப ஜோதிடர் தேவை.

ஜோதிடத்தில் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. அதைத் தெரிவிக்கும் பொறுப்பு ஜோதிடர்களிடம் உண்டு. அதையறிந்து ஜோதிடர்களும் நடந்துகொள்ள வேண்டும். அதேசமயம் நல்ல ஜோதிடரை கண்டுகொள்ளும் பொறுப்பு ஜாதகருக்கும் உண்டு.   இருவரும் சமநிலையில் இருந்தால் ஜோதிடம் தரும் பலனை முழுமையாக எந்நாளும் அனுபவிக்கலாம்.

நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி