-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, January 12, 2013

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவரும் அனைத்து வளங்களையும் நலங்களையும் பெற்று திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உண்மையாகவும் ஒழுக்கமாகவும் ஒற்றுமையாகவும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இது தைத் திருநாள். மதம் இனம் மொழி கடந்த ஒரு திருநாள். வாழ்வாதாரமான உணவிற்கும் அதனைப் படைக்கும் உழவனுக்கும், உழவனுக்கு உதவும் கால்நடைகளுக்கும் உரிய திருநாள். இங்கே மொழி இல்லை. மதம் இல்லை. இனம் இல்லை. ஜாதி இல்லை.

அரசு விடுமறை மட்டும் அல்ல இந்த நாள். நாம் நம்மை உணர வேண்டிய நாள். எந்த ஒரு தனி மனிதனும் தனியாகவே வாழ்ந்துவிட முடியாது. அனைவரின் துணையும் கட்டாயம் தேவை. மனிதனின் துணை மட்டும் அல்ல விலங்குகள் துணையும் தேவை. இயந்திரம் எல்லாவற்றையும் செய்து கொடுக்கும் என்று விட்டுவிட்டால்? தாய் மடியும் தேவையில்லை என்றாகிவிடும். அதனால் நாம் வாழ உதவும் அனைத்தும் வாழ நாமும் உதவுவோம்.

இயற்கையைப் போற்றுவோம். இறையறுளைப் பெறுவோம். சுற்றமும் சொந்தமும் நம்மோடு என்றும் இணைந்திருக்கும்படி இவ்வுலகில் வாழ்வோம்.


அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி