-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, January 1, 2013

பண்பாடும் ஜோதிடமும்

பண்பாடும் ஜோதிடமும்
பண்பாடுகள் பல இருக்க ஜோதிடம் மட்டும் எப்படி ஒன்றாகும்

பண்பாடு என்பது என்ன?

தனி மனிதனின் வாழ்க்கை முறைதான் இந்த பண்பாடு என்பது. ஒவ்வொரு மனிதனும் எவ்வகையில் தன்னுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறான் என்ற செயலின் ஒரு சொல் வடிவம் தான் பண்பாடு என்பது.  இப்புவியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் முறைகளையும் வகைப்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட செயல்கள் தான் வெவ்வேறு வடிவம் எடுப்பதைக் காண முடியும். உதாரணமாக மதம், வழிபாடுகள், திருமணம், உறவுமுறைகள், விழாக்கள் இப்படி வெகு சில வார்த்தைகளில் இந்த பண்பாட்டை நாம் பிரித்துவிட முடியும்.

ஜோதிடம் ஒன்று தானா?
ஆம். இது ஒரு காலக் கணக்கு. அனைவருக்கும் பொதுவானது. மதம் இனம் நாடுகள் கடந்த ஒரு பிரபஞ்ச கணக்கு. இதன் மூலம் பெறும் பலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானது. எப்படி?
மனிதனின் உணர்வுகள் பொதுவானது.
அவனது உடல்கூறுகள் பொதுவானது
அவனது அடிப்படை வாழ்க்கை பொதுவானது.
ஆனால் மனிதன் சார்ந்த இடத்தின் சட்டதிட்டங்கள் வேறாக, பழக்கவழக்கங்கள், வேறாக இருக்கலாம். அதற்காக ஜோதிடம் மாறப்போவதில்லை. ஜோதிடத்தின் மீதான அணுகுமுறைகள் தான் மாறுகின்றன.

ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன் குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தது இன்று எவ்வளவு. இந்த மாற்றத்தை ஜோதிடம் எவ்வாறு பார்க்கிறது?
ஒருவருக்கு குழந்தைகள் உண்டா இல்லையா என்பது தான் ஜோதிடத்தின் முதல் கேள்வி. ஒருவருக்கு ஒரு குழந்தை இருந்தாலும் 10குழந்தைகள் இருந்தாலும் அவர் தாய்மைப் பேற்றை அடைந்துவிட்டார் என்று தான் அர்த்தம். அவருக்கு குழந்தைபாக்கியம் உண்டு என்பது தான் ஜோதிடம் கூறும் பதில். இது எந்த நாட்டிற்கும் எந்த மதத்திற்கும் எந்த இனத்திற்கும் பொருந்தும்.

அதனால் தான் எத்தனை பண்பாடு கலாச்சார இன மாற்றங்கள் இருந்தாலும் ஜோதிடம் மட்டும் அப்படியே இருக்கிறது இருக்கும். நாம் தான் அதனை உணர முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி