-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, November 12, 2012

சனி பகவானின் நான்காம் பார்வை

சனிபகவான் – நீதிமான்
பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான் பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும் எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.

விதி 1.

சனிபகவான் ஜெனன ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் பாவபலனை ஏற்ற இறக்கத்துடன் தான் வைத்திருப்பார்.

விளக்கம்.
சனி பகவான் மிகச் சிறந்த நீதிமான். ஒருவர் செய்யும் வினைகளுக்குத் தகுந்த பயன்களை எந்தவித பாகுபாடுமின்றி வழங்கக்கூடியவர். ஜெனன ஜாதகத்தில் அவர் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் இடம் அதாவது நான்காம் பாவம், இலக்கிண பாவத்திலிருந்து எந்த பாவமாக அமைகிறதோ அதற்குரிய பாவ பலன்களில் ஒன்றையேனும் ஏற்ற இறக்கத்துடன் அதாவது திருப்தியான நிலையில்லாமல் தான் வைத்திருப்பார் என்கிறது பிருகு சரல் பத்ததி.
பாவ பலன்கள். 12 பாவங்களுக்கும் தனித்தனியே நிறைய காரத்துவங்கள் உள்ளன. அவற்றை சுருக்கி இங்கே பார்ப்போம்.

1 இலக்கிண பாவம், ஆயுள், திருப்தி
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி குழந்தைப் பருவம், சுகம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்


உதாரண ஜாதகங்கள் மூலம் இதனை விளக்கமாகப் பார்க்கலாம்.

உதாரணம் 1 இராமர் ஜாதகம் –
அவதாரப் புருஷர் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் இராமவதாரம். அவருடைய இலக்கிணம் – கடகம் . சனிபகவான் இருப்பது – துலாம் ராசியில்.
துலாமிலிருந்து நான்காம் பாவம் மகரம் அதாவது இலக்கிணத்திலிருந்து 7ம் பாவம்.

ஏழாம் பாவ காரகங்கள். – களத்திரம் (கணவன் அல்லது மனைவி)

இராமர் இல்லறவாழ்க்கை ஏற்படுத்திய வெற்றியும் தோல்வியும் நாம் அறிந்ததே.


உதாரணம் 2. – இந்திராகாந்தி. முன்னாள் பாரதப் பிரதமர்.

இலக்கிணம் – கடகம்.
சனிபகவான் இருப்பது – கடகம் அதாவது இலக்கினத்திலேயே சனிபகவான்.

கடகத்திலிருந்து  நான்காம் பாவம் துலாம் அதாவது இலக்கிணத்திலிருந்து 4ம் பாவம்.

காரகம் – தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம்.


இந்திராகாந்தி அவர்கள் தனது இளமைப் பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்றும் தனது 18ம் வயதில் தாயை இழந்தார் என்றும் கூறப்படுவதை சனிபகவானின் நான்காம் பாவம் உணர்த்துகிறது.

உதாரணம் 3. –காந்தியடிகள். தேசப்பிதா. அகிம்சாவாதி. அவருடைய இலக்கிணம் – துலாம்.
சனிபகவான் இருப்பது – விருச்சிகம்
விருச்சிகத்திலிருந்து  நான்காம் பாவம் கும்பம் அதாவது இலக்கிணத்திலிருந்து 5ம் பாவம்.

காரகம் – குழந்தைகள்,

மகாத்மாகாந்தி அவர்கள் தனது குழந்தைகள் மூலமாக நிம்மதியாக இருந்தார் என்று சொல்லமுடியாது. அவரது 19ம் வயதில் பிறந்த மூத்த மகன் ஹரிலால், பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இறுதியில் மதம் மாறி நோய்நொடியுடன் தான் இறந்து போகிறார்.


உதாரணம் 4- மாநில முதல்வர் – செல்வி ஜெயலலிதா
இலக்கிணம் – மிதுனம்
சனி பகவான் இருப்பது – கடகம்.
சனிபகவானிடமிருந்து நான்காம் பாவமாக வருவது இலக்கிணபாவம் ஐந்து. காரகம் குழந்தைகள்.

உதாரணம் 5. இசைஞானி இளையராஜா.
இலக்கிணம் ரிசபம்.
சனி பகவான் இருப்பது ரிசபத்தில்.
இலக்கிணம் மற்றும் சனிபகவானிடமிருந்து நான்காம் பாவம் தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம். அவருடைய குழந்தைப் பருவம் வறுமையாக இருந்தது என்று கூறப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கோள்களின் தாக்கங்கள் ஒரே மாதிரி விளைவைத் தான் தருகின்றன. இங்கே கொடுக்கப்பட்ட ஜாதகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தவர்களைப் பற்றியது. அதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விரிவாக ஆராய முடியாது. இருப்பினும் ஒரு ஜோதிட ஆராய்சி நோக்கில் கையாளப்பட்டுள்ளது. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

ராசிச் சக்கரம் ஒன்றை மட்டுமே வைத்து எளிய பலன்கள் கூறும் முறையில் இது அமைந்துள்ளது. சனிபகவானின் 4ம் பார்வையாக வரும் பாவம் தரும் பொதுவான விளைவுகள் தான் இவை. இருப்பினும் விளைவுகள் மாறாது. அந்த பாவத்தின் முழுப்பலனும் மற்ற கிரகங்கள் வைத்தும் மற்ற வர்க்கச்சக்கரங்கள் மூலமாகவும் இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.

தொடரும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி