-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, August 17, 2012

ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .

மனித வாழ்க்கையில் நன்மையும் தீமையும் கலந்து தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் இப்படி ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு செயல்கள் மூலம் தான் அனைவருடைய வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது. முழு வாழ்க்கையிலும் நன்மையை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை, துன்பத்தை மட்டுமே எல்லா நாளும் அனுபவித்தவர்களும் இல்லை. இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் எது எவ்வளவு காலம் நிலைத்திறுக்கும் என்பதும் எப்பொழுது அந்த நிலைமை மாறும் என்பதும் இறைவன் விதித்த கணக்கு. அதை முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியுமே தவிர. மாற்ற முடியாது. இறைவனின் இந்த மொத்த கணக்கையும் இரண்டு வார்த்தைகளில் அடக்குவோமானால் அது தான் ஜோதிடம் கூறும் யோகங்களும் தோசங்களும்.

யோகங்கள் என்றால் என்ன?

யோகங்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட நல்வினைகள். அதாவது நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன்பு வரை செய்த நல்ல வினைகளின் பலன்கள். நாம் எதையெல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் அனுபவிக்கிறோமோ அதல்லாம் நமக்கு கிடைத்த யோகங்கள்.

தோசங்கள் என்றால் என்ன?

நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன் செய்த தீவினைகளின் பலன். நமக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ எதையெல்லாம் நம்மால் திருப்தியாக அனுபவிக்க முடியவில்லையோ அதெல்லாம் தோசங்கள்.

இந்த யோகங்களையும் தோசங்களையும்  பணத்தைக் கொண்டோ அல்லது வேறு எந்த அளவீட்டு முறைகளைக் கொண்டோ அளக்க முடியாது. நம் மனம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை அளக்கும் அளவுகோல்.

யோகங்கள் தோசங்கள் எப்படி ஏற்படுகின்றன?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. அதே போல ஒவ்வொரு பாவமும் (வீடுகளும்) ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. கோள்களும் பாவங்களும் (வீடுகளும்) தங்களுக்குள் நல்ல தொடர்பை பெறும் போது யோக நிலைகளையும் நல்ல தொடர்பு இல்லாத நிலையில் நிகழும்  தொடர்பு தோச நிகழ்வுகள் நிகழ்வதையும் எடுத்துக் காட்டுகின்றன.

அனைவரது ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்களாவது கட்டாயம் இருக்கும். காரணம் ஒரு உயிர் மனிதப் பிறவி எடுப்பதற்கு என்றே சில புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும் அப்படி செய்த புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்க கடைமைப்பட்டிருப்பதால் அந்த யோகநிலைகளுடன் பிறக்கின்றனர். அதே போலத் தான் தோசங்களும். மனிதப் பிறவி என்பது மகத்தானது தான் இருந்தாலும் முற்பிறவியில் நாம் பண்ணிய பாவம் தான் நம்மை மீண்டும் பிறவி எடுக்க வைத்துள்ளது. அதனால் அனைவருக்கும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும்.

யோகங்களும் தோசங்களும் எப்பொழுது செயல்படும்?
அனைத்து யோகங்களும் அந்த யோகங்கள் தொடர்பு பெறும் கிரகங்கள் மற்றும் பாவங்களின் அதிபதிகள் திசை புத்தி அந்தரம் சூட்சுமம் உள்ள காலங்களில் செயல்படும். அது தவிர இராஜயோகங்கள் எல்லா காலங்களிலும் செயல்படும், பலன்கள் திசா புத்தி காலங்களில் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.

அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்?  அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?

உணருதல் தொடரும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி