-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, July 28, 2012

ஜோதிடரின் தகுதிகள்?

ஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன?


ஜோதிடத்தை மக்களிடம் கொண்டுசெல்பவர்கள் தான் ஜோதிடர்கள். மக்கள் ஜோதிடரை வைத்தே ஜோதிடத்தை மதிப்பிடுகின்றனர். ஒரு அலோபதி மருத்துவர் சரியாக வைத்தியம் பார்க்கவில்லை என்றால் மருத்துவத்தை குறைகூறுவதில்லை. ஆனால் ஏதோ ஒரு ஜோதிடர் சாதகருக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறினால் உடனடியாக ஜோதிடத்தை தவறு என்கின்றனர். இந்நிலையில் ஜோதிடரின் பங்கு மட்டுமே ஜோதிடத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற நிலையில் ஜோதிடர் என்பவரின் தகுதிகளையும் நாம் சற்று ஆராய வேண்டும்.

ஜோதிடர் ஜோதிடக் கலை மட்டுமல்ல பஞ்ச கலைகளைகளிலும் புலமை பெற்றிருக்க வேண்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன. அவையாவன.

  1. ஜோதிடம்.
  2. ஆன்மீகம்
  3. மருத்துவம்
  4. மாந்திரீகம்
  5. மனோதத்துவம்

இந்த பஞ்ச கலைகளை கற்றவர் மட்டுமே ஜோதிடருக்கான தகுதி உள்ளவர் என்கின்றன புராணங்கள். இவற்றைப் பற்றிய சிறு சுருக்கம்.

ஜோதிடம்.
ஜோதிடம் என்பது மதங்களைக் கடந்து மனித உயிர்களின் பிறப்பை மையமாக வைத்து எழுதப்படும் ஒரு காலக் கணக்கு. பிறப்பிற்கும் விண்ணில் உள்ள நட்சத்திரங்களுக்கும் உள்ள தொடர்பின் காலக்கணக்கீடும் அதனுடைய பலன்களும் உள்ளடக்கியது. இதன் மூலம் சாதகர்  எந்தஎந்த காலங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து சாதகருக்கு உணர்த்தி அதன் மூலம் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ சோதிடர் உதவிபுரிய வேண்டும்.

ஆன்மீகம்
மனிதன் என்ற நிலையிலிருந்து கடவுள் என்ற நிலைக்கு மனிதனை கொண்டுசெல்வது மதம். அந்த பண்பட்ட நிலையடைய உதவும் கோட்பாடுகள் சாஸ்திர சம்பிரதாயங்கள் வழிபாடுகளை உள்ளடக்கியது ஆன்மீகம். நாம் பிறக்கும் போது என்ன கொண்டுவந்தோம் (புர்வ புண்ணியம்) என்பதை உணர்ந்து இப்பிறவியின் கர்ம வினைகளை முடித்து முக்தி அடைய சோதிடர் வழிகாட்டுபவராக இருக்க வேண்டும்.

மருத்துவம்
சுவரின்றி சித்திரம் இல்லை என்பதற்கிணங்க நாம் ஆன்மீக நிலையைக் கடைப்பிடித்து கடவுள் நிலைக்கு உயர உதவும் உடம்பைப் பேணிக்காக்க உதவுவது இந்த மருத்துவக் கலை.
நாடி பிடித்து பார்க்கும் முன்  சோதிட காலக்கணக்கின் பலனை அறிந்து எந்த நேரம் இவருக்கு எப்படி வைத்தியம் பார்த்தால் நோய் குணமாகும் என்பதை மருத்துவமும் சோதிடமும் அறிந்த ஜோதிடரால் மட்டுமே விரைவாக உறுதியாக கூறவும் குணப்படுத்த முடியும்.

மாந்திரீகம்
அதிகபட்ச அதர்மத்தை சுத்தமான தர்மத்தால் அழிக்க வேண்டுமானால் நாம் செய்யும் காரியங்களில் சில அதிசியங்கள் நட்த்தப்பட வேண்டும். அந்த அதிசியங்கள் செய்யும் முறைதான் இந்த மாந்திரீகம். நல்லவர்களை தீய சக்திகளிடமிருந்து காத்து நல்லவர்களுக்கு அவர்களின் நற்செயலுக்கான பலன்களை கிடைக்கச் செய்வதற்கு சோதிடர் கண்டிப்பாக உதவ வேண்டும்.

மனோதத்துவம்
மனிதனின் நிகழ்கால நிலையை கணித்துக் கூறுமுன் அவனது மனோநிலையை கணிக்க வேண்டும். மனித மனத்தைக் கையாளத் தெரிந்திருந்தால் மட்டுமே நாம் கூறும் நல்ல செய்திகளைக் கூட கேட்க வைக்க முடியும். யாரையும் புண்படுத்தாத வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலன் கேட்க வருபவர் ஏதோ ஒரு ஏக்கத்துடன் தான் வருவார். அவரின் மனம் கோணாமல் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.


இப்படி ஜோதிடர்களின் பொருப்பு மிக அதிகமாக உள்ளது. அந்தக் காலத்தில் நாட்டுக்கு மட்டுமே பார்க்கப்பட்ட ஜோதிடம் பின்பு அதை ஆளும் மன்னனுக்குப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அதை அனைவரும் கற்கவும் பலன் கூறவும் யாவருக்கும் உரிமை உண்டு என்ற நிலையில் ஜோதிடர்கள் தத்தம் திறமையை வளர்த்துக் கொண்டு இந்த அரிய தெய்வக் கலைக்கு புகழைத் தேடித்தரவேண்டும்.

ஒருவர் அனைத்திலும் திறமையை வளர்த்துக் கொள்வது இயலாது என்றால் ஓரளவிற்கு அந்தத்துறையில் அடிப்படை அறிவையாவது கண்டிப்பாக வளர்த்துக் கொண்டே ஆகவேண்டும். அப்படி வளர்த்த பிறகு அந்தஅந்தத் துறையில் புலமை பெற்றவர்கள் ஒருங்கிணைந்து சாதகரின் நலன் காக்க முன்வரவேண்டும்.  அப்படி முறைப்படி நாம் பயணித்தோமானால் எதிர்காலத்தில் நம் முன்னோர்கள் சித்த புருசர்களால் உணரப்பட்ட ஜோதிடம் இவ்வுலகை வெல்லும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி